திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முத்தனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அதே பகுதியில் இனிப்பகம் நடத்தி வருகிறார். இந்த இனிப்பகத்தில் பணிபுரியும் நாகலட்சுமி வழக்கம்போல் கடையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வெயிலடுச்சாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், இனிப்பகத்தினுள் ஏறி, நாகலட்சுமியை தகாத வார்தைகளால் திட்டியும், கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் உள்ளார். அந்நேரத்தில் சரவணனின் உறவினர்கள் அவரை சமாதானப் படுத்த முற்பட்டனர். ஆனால் அவர் மிகுந்த கோபத்துடன் நாகலட்சுமியை தாக்க முற்பட்டுள்ளார்.