திண்டுக்கல்:அய்யம்பாளையம் பகுதியில் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதில் மாங்காய், கொட்டை முந்திரி உள்ளிட்டவை பயிரிட்டு வருகின்றனர். தென்னை விவசாயிகளுடைய விளை பொருட்களை நிரந்தரப்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும், இந்தப் பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
கார்ப்பரேட் கம்பெனிகள் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு சன்பிளவர் ஆயில் 70 ரூபாயாக இருந்தது. தேங்காய் எண்ணெய் லிட்டர். 160 ரூபாயாக இருந்தது. ஆனால் திட்டமிட்டு இந்த விவசாயத் தொழிலையும் விவசாயத்தையும் பாதிக்கின்ற வகையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மாநில அரசு துணை போனதால் மீண்டும் சன் பிளவர் ஆயில் 180 ரூபாய்க்கும், தேங்காய் எண்ணெய் 120 ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு மோசமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த தேங்காயை குடோன்களில் குவித்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் முதல் 5 லட்சம் என்றும், கடந்த இரண்டு மாதங்களாக 1 கோடி தேங்காய் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வியாபாரிகளுக்கு பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்காமல் குறைந்த விலைக்கு வாங்கி குடோன்களில் பதுக்கி வைக்கின்றனர். ஆனால் வியாபாரிகளிடம் 80 ரூபாய் 70 ரூபாய்க்கு கேட்கிறார்கள்.