திண்டுக்கல்:நவராத்திரியின் முக்கிய விழாக்களாக கருதப்படும் ஆயுத பூஜை நேற்றும் (அக்.14), விஜய தசமி இன்று (அக்.15) கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை நாளில் செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் பணிபுரியும் இடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் பூஜை செய்து வழிபடுவர்.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் அந்தவகையில், நேற்று திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஏஎஸ்பி அருண் கபிலன், காவல் ஆய்வாளர் ஃபாஸ்டின் தினகரன், ஆய்வாளர் விஜய், மற்ற காவலர்கள் என அனைவரும் காவல்நிலையத்தில் பூஜை செய்து வழிபட்டனர்.
காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக கொடுத்த அழுத்தத்தால்தான் கோயில்கள் திறப்பா? - சேகர்பாபு பதில்