தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'108 ஆம்புலன்ஸ் இப்படிதான் இயங்குது' - கல்லூரி மாணவிகளுக்கு நடந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

திண்டுக்கல்: 108 ஆம்புலன்ஸில் உள்ள முதலுதவி கருவிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அரசு கல்லூரி மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

awareness
awareness

By

Published : Mar 5, 2020, 7:17 PM IST

திண்டுக்கல் எம்விஎம் அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் லதா பூர்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 108 ஆம்புலன்ஸில் உள்ள முதலுதவி உபகரணங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

முகாமிற்காக கல்லூரி வளாகத்திற்கு அவசர சிகிச்சை வாகனங்களான 108, 102 மற்றும் தாய் சேய் ஊர்தி வரவழைக்கப்பட்டிருந்தது. இவற்றை எவ்வாறு நாம் தொடர்பு கொள்வது, பேரிடர் காலங்களில் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது குறித்து அதில் பணியாற்றும் ஊழியர்கள் மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு முகாம்

இந்நிகழ்ச்சியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகுரு பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுக அறிவாலயத்தில் ஜின்னாவின் ஆவி - பொன். ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details