திண்டுக்கல்:கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வில்பட்டி, அட்டுவம்பட்டி ,பள்ளங்கி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் அவக்கோடா விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் அவகோடா சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தொடர்ந்து பலவேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோவிற்கு 150 முதல் விற்பனையாகிறது. இந்த சூழலில் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அவகோடா மரங்கள் மற்றும் செடிகளை கேட்டர் பில்லர் எனப்படும் ராட்சச கம்பளி பூச்சி இனங்கள் கடித்து சேதப்படுத்தி வருகிறது.