திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களான பூலத்தூர், தாண்டிக்குடி , பேத்துபாறை உள்ளிட்ட பல கிராமங்களில் அவகோடா விவசாயம் செய்து வருகின்றனர்.
இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் ஏலம் போன அவகோடா: விவசாயிகள் மகிழ்ச்சி!
திண்டுக்கல்: அவகோடா மரம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ஏலம் போனது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட அவகோடா மரங்கள் அதிக விலைக்கு ஏலம் போவது வழக்கம். ஆனால் முதல் முறையாக கொடைக்கானலில் உள்ள ஒரு அவகோடா மரம் ரூ.2.45 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறும்போது, ’விவசாயிகள் பலரும் தற்போது பணப் பயிரான அவகோடாவை வளர்த்து வருகின்றனர். கொடைக்கானலின் சிறப்பான அவகோடா மரம் ரூ.2.45 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. ஆனால், தற்போது அவகோடா நோய் தாக்குதலால் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் அவகோடா விவசாயத்தை நோய் தாக்குதலில் இருந்து காக்க வேளாண்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.