திண்டுக்கல்:திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள டிஐஜி அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானம் நுழைவுவாயிலில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், சிசிடிவி கேமராவின் இணைப்பைத் துண்டித்து விட்டு, பின்னர் உள்ளே இருந்த ஏடிஎம் இயந்திரத்தின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அடையாளம் தெரியாத நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.