திண்டுக்கல்:வேடசந்தூர் தாலுகா வெள்ளையகவுண்டனூர் அருகே பச்சலாகவுண்டனூரை சேர்ந்த ராஜேந்திரன்-ராணி தம்பதியினரின் மகள் உமா. இவரின் கணவர் உயிரிழந்த நிலையில், இரண்டு மகன்களுடன் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு நூற்பாளையில் வேலைக்கு சென்றபோது தங்கச்சி அம்மாபட்டியைச் சேர்ந்த காளிமுத்து (30) என்பவருடன் திருமணத்தை மீறியத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையறிந்த உமாவின் பெற்றோர் அவரை கண்டித்த நிலையில், அவர் காளிமுத்துவுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காளிமுத்து இன்று (ஆக.14) காலை உமாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.