தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி - Dindigul District News

திண்டுக்கல்: தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை மோசடி செய்துவிட்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சி
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சி

By

Published : Aug 10, 2020, 9:36 PM IST

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள உரல் உருட்டு பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (53). இவர் அதே பகுதியில் உள்ள தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 32 சென்ட் நிலத்தை உறவினர் ஒருவர் மோசடி செய்து வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்துவிட்டதாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.

அதேபோல் இது சம்பந்தமாக வட்டாட்சியரிம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த பழனிச்சாமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரைத் தடுத்துநிறுத்தி சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details