திண்டுக்கல்மாவட்டம் வேடசந்தூர் அடுத்து சேணன்கோட்டை துணை மின் நிலைய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் ஆக பணியாற்றி வரும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தொடர்ச்சியாக வேடசந்தூர் பகுதி விவசாயிகளிடம் மின் இணைப்புக்கு லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில், கெண்டையகவுண்டனூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது தந்தை இறந்துவிட்தாகவும் அவருடைய பெயரில் இருக்கும் மின் இணைப்பைத் தனது பெயரில் மாற்ற விண்ணப்பித்துள்ளார். இதற்கு உதவி மின் பொறியாளர் ரவிக்குமார் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.இதுதொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.