தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவை கம்யூனிஸ்டுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் - அர்ஜுன் சம்பத் - ஸ்டாலினை விமர்சித்த அர்ஜுன் சம்பத்

ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை எனவும், பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் என்று திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

tamil nadu cm stalin  cm stalin  arjun sumbath  arjun sumbath slams stalin  arjun sumbath release  Hindu Makkal Katchi  அர்ஜுன் சம்பத்  தமிழ்நாடு முதலமைச்சர்  இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்  இந்து மக்கள் கட்சி  ஸ்டாலினை விமர்சித்த அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

By

Published : Sep 8, 2022, 2:49 PM IST

திண்டுக்கல்:ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்குவதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்து, கோ பேக் இயக்கம் நடத்தப் போவதாக கூறி செப்டம்பர் 6ஆம் தேதி அன்று இரவு கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் வந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், அர்ஜூன் சம்பத்தை கைது செய்து, பின்னர் நேற்று (செப் 7) மாலை விடுவித்தனர்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “கம்யூனிஸ்ட் என்பவர்கள் கபட வேடதாரிகள் என்றும், கனவில் கூட இந்த நாடு நல்லா இருக்கணும்னு நினைக்காத ஒரே கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்றும் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளர்.

இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்பொழுது திமுகவில் ஊடுருவி அரசு எந்திரத்தையும் திமுக கட்சியினரையும் முழுக்க முழுக்க பயன்படுத்தி வருகிறது. ஆகையால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் உஷாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேச்சிய அவர், “கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினரை நன்றாக டீல் செய்திருப்பார். அதேபோல் கூட்டணி கட்சியினரை யார் யாரை எங்கெங்கே வைக்க வேண்டும் என்று கருணாநிதி நன்றாக தெரிந்திருந்தார். ஆனால் ஸ்டாலினோ இது அவர்கள் ஆட்சி அதாவது கூட்டணி கட்சியினரின் ஆட்சி என்று கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறி வருவதிலிருந்து ஸ்டாலின் அவர்கள் எந்த அளவுக்கு உள்ளார் என தெரிகிறது.

செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத்

திமுகவில் இருக்கக்கூடிய மூத்தத் தலைவர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி திமுகவை கூட்டணி கட்சியினரிடமிருந்து காப்பாற்ற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுமை திறன் இல்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் அறிவு கூட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், “முதலமைச்சர் ஸ்டாலினில் மனைவி துர்கா, கோயிலுக்கு செல்வதும் கும்பாபிஷேகங்கள் செய்வதும் என இருக்கிறார். ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை. இது பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் என்று இரட்டை வேடம் போடுவது போல் உள்ளது” என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: "இந்துக்கள் கபடவாதிகள்" - குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ் விராத் சர்ச்சைப் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details