அகில இந்திய டேக்வாண்டோ போட்டிகள் கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இது குறித்து சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தின் மாஸ்டர் பிரேம்நாத் அளித்த பேட்டியில்,
"தமிழ்நாட்டின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற 40 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் மாணவர்கள் தருண் அஜய், வேதேஷ் என்ற இரண்டு மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இதேபோல மணிகண்டன், மதுபாலா ஆகிய இருவரும் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு சான்றிதழும் வென்றனர்.
அதேபோல் சர்வதேச அளவில் நடைபெற்ற ஐந்தாவது கறுப்பு பட்டயத்திக்கான தேர்வு கொரியா நாட்டின் சார்பில் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு கடந்த மாதம் நடைபெற்றது.