திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் அதிகளவு லஞ்சம் கேட்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
மக்களின் தொடர் புகாரையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகராஜ், மாவட்ட ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான 5க்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு காவல் துறை அலுவலர்கள் நேற்று(நவ.05) மாலை 5 மணி முதல் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அலுவலகத்திலுள்ள அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு அலுவலகப் பணியாளர்களிடம் தனித்தனியே சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. தொடர்ந்து அலுவலக கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த திடீர் சோதனையில் கணக்கில்காட்டப்படாத ரூ.60 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அலுவலகத்தில் இருந்து 21,400 ரூபாயும், சார் பதிவாளர் சுரேஷ் (பொறுப்பு) வாகனத்தில் இருந்து 39 ஆயிரம் ரூபாயும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர் விசாரணை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு: ரூ.60,400 பறிமுதல் - சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு
திண்டுக்கல்: நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில்காட்டாத 60 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Anti-bribery probe at Nilakkottai affiliate office: Rs 60,400 confiscated