திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சென்றுவர ஏதுவாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சென்னை உள்ளிட்ட பிற ஊர்களிலிருந்து பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பிப்ரவரி எட்டாம் தேதியன்று பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி ஏழாம் தேதி சென்னையிலிருந்து 15 சிறப்புப் பேருந்துகள், திருச்சி, திண்டுக்கல்லிலிருந்து தலா ஐந்து பேருந்துகள், கோவை, மதுரையிலிருந்து தலா நான்கு பேருந்துகள், சேலத்திலிருந்து மூன்று பேருந்துகள், காரைக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்து தலா ஒரு சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 40 அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் பழனிக்கு இயக்கப்பட உள்ளன.