திண்டுக்கல்: ஆந்திர மாநிலம் சத்யசாய் ஜில்லா கதிர் மண்டலத்தை சேர்ந்த 22 பக்தர்கள், கடந்த டிச.31 அன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனர். தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று(ஜன.2) இரவு வேடசந்தூர் அருகே விருதலைபட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் அருகே சபரிமலை பக்தர்கள் வாகனம் விபத்து: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்! - andhrapradesh
சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
![திண்டுக்கல் அருகே சபரிமலை பக்தர்கள் வாகனம் விபத்து: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்! சபரிமலை பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17382725-thumbnail-3x2-viruthalaipatti.jpg)
சபரிமலை பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!
சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ
இதில், வேன் நொறுங்கியது. இந்த விபத்தில் சிராமுலு நாயக் (42) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து கூம்பூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:Cuddalore Accident: அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!