தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா குறித்து அவதூறாக பேசிய நத்தம் விஸ்வநாதன் உருவபொம்மை எரிப்பு! - நத்தம் அமமுக கட்சியினர்

திண்டுக்கல்: நத்தம் தொகுதி அமமுகவினர் சசிகலா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து இன்று (ஜூன் 21) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் உருவபொம்மை எரித்த அமமுக கட்சியினர்
அதிமுகவைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் உருவபொம்மை எரித்த அமமுக கட்சியினர்

By

Published : Jun 21, 2021, 5:26 PM IST

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், நத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் தலைமையில் சனிக்கிழமை (ஜூன் 19) திண்டுக்கல் அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

சசிகலாவை சாடிய நத்தம் விஸ்வநாதன்

அப்போது, "சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை. அவரை தொலைபேசியில் அல்லது வேறு எந்த ஒரு விதத்தில் தொடர்புகொண்டாலோ, அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "சசிகலா தாய் இல்லை; அவர் ஒரு பேய் அவர்; ஒரு வேஸ்ட் லக்கேஜ் சுமந்து செல்ல நாங்கள் ரெடியாக இல்லை" என்று பேசினார்.

விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்த அமமுக

இதையடுத்து, அவரைக் கண்டித்து இன்று (ஜூன் 21), நத்தம் பேருந்து நிலையம் அருகே விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து அங்குவந்த காவலர்கள், தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த விஸ்வநாதன் உருவபொம்மையை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details