தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம்! - AMMAYOUTHSPORTSSCHEME, DINDIGULSEENIVASAN, MINISTER

திண்டுக்கல்: அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

dindigul srinivasan
dindigul srinivasan

By

Published : Jan 14, 2020, 10:33 PM IST

தமிழ்நாடு கூட்டத்தொடரின்போது 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் விதமாக அம்மா விளையாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மைதானங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் என்ஜிஓ காலனி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மா விளையாட்டு திட்டத்தினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, இளைஞர்கள் மற்றும் இளம் வீராங்கனைகளுக்கு 60,000 ரூபாய் மதிப்பிலான கிரிக்கெட், கால்பந்து ஆகியவற்றுக்கான உபகரணங்களை வழங்கினார்.

தமிழர்களுக்கு ஆளுநர் பொங்கல் வாழ்த்து

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களையும், விளையாட்டுகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில மற்றும் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details