தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் மலைப்பகுதியில் 14 ஆதிவாசி கிராம மேம்பாட்டிற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு - கொடைக்கானலில் 14 ஆதிவாசி கிராம மேம்பாட்டிற்கு ரூபாய் பதினெட்டு கோடி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 14 ஆதிவாசி கிராம மேம்பாட்டிற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 13, 2022, 3:57 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட கீழ்மலைக் கிராமப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த யானைகள் பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்கின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானலில் இன்று (ஆக.13) செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வன அலுவலர் திலீப், 'கொடைக்கானல் மலைப்பகுதியில் 14 ஆதிவாசி கிராம மேம்பாட்டிற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு செய்யப்பட்ட வேண்டிய திட்டங்கள் குறித்து வரைவு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சுமார் 8 கி.மீ. அளவிற்கு தொங்கும் மின்வேலி அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில் நுட்ப வல்லுநர்களின் ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு திட்டம் செயல்படுத்தப்படும். இதையடுத்து தமிழ்நாடு வைல்டர் நைஸ் எக்ஸ்பீரியன்ஸ் திட்டப்படி, மன்னவனூர் மற்றும் தடியன் குடிசை பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி அந்நிய மரங்களை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் கொடைக்கானல் வனத்துறை எடுத்து வருகிறது. முன்னதாக இந்த 14 ஆதிவாசி கிராமங்களிலும் வனத்துறை சார்பில் ரூ.66 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

கொடைக்கானலில் ஆதிவாசி கிராம மேம்பாட்டிற்கு ரூபாய் 18 கோடி ஒதுக்கீடு
இதையும் படிங்க: மழை பெய்யும் போது மழை நீர் வடிகால் அமைப்பதாக குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details