திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை பல்வேறு இடங்களில், அக்கட்சியின் உயர் மட்ட குழு உறுப்பினரும் பாடலாசிரியருமான சிநேகன் ஏற்றி வைத்தார்.
'கருத்து ஒத்து வந்தால் கூட்டணிக்கு தயார்..!' - சிநேகன் - கமல்ஹாசன்
திண்டுக்கல்: "மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்தோடு ஒத்துவந்தால், எந்த கட்சியோக இருந்தாலும் கூட்டணிக்கு தயார்" என்று அக்கட்சியின் உயர் மட்ட குழு உறுப்பினர் சிநேகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் சினேகன் பேட்டிதிண்டுக்கல்லில் சினேகன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை வைத்து மிரட்டி ஆட்சி நடத்தி வருகிறது. தமிழக அரசு கையாளாகாத அரசாக உள்ளது. எங்கள் கருத்தோடு ஒத்துவந்தால் மட்டுமே கூட்டணி அமைப்போம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடுவது உறுதி. தேர்தல் நேருங்கும் போது கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட்டணி பற்றி அறிவிப்பார், என்றார்.