திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கரோனோ பாதிப்பை இந்தியாவில் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் ஊரடங்கிற்கு வேண்டுகோள்விடுத்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் ஆதரவோடு இன்று காலை 7.00 மணி முதல் தொடங்கியது.
ஒட்டன்சத்திரத்தைப் பொறுத்தவரை வாகனப் போக்குவரத்து 100 விழுக்காடு நிறுத்தப்பட்டது. பேருந்து நிலையம், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வணிக வளாகம் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலேயே பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையின் வியாபாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் சங்கத்தின் சார்பில் இன்று முழு அடைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆள்நடமாட்டம் இல்லாத ஒட்டன்சத்திரம் மருந்தகம், பால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவளித்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா: எண்ணிக்கை 7ஆக உயர்வு