திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கன்னியப்பன். இவரது மகள் கார்த்திகா ஜோதி(18). இவர், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையிலுள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியாருக்குச் சொந்தமான சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் பிப். 21ஆம் தேதி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் இன்று (பிப்.26) உயிரிழந்தார்.