தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பதவி வெறியில் தமிழ்நாட்டை அடமானம் வைத்த அதிமுக அரசு’- கனிமொழி எம்.பி - பதவி வெறியில் டெல்லியில் தமிழ்நாடு அடமானம்

திண்டுக்கல்: பதவி வெறியில் ஆளும் அதிமுக அரசு தமிழ்நாட்டை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டதாக மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி ஆளுங்கட்சியை சாடி பேசியுள்ளார்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

By

Published : Apr 1, 2021, 6:26 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை ஆதரித்து கனிமொழி எம்.பி நத்தம் பேருந்து நிலையத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ’உங்களின் உற்சாகமான வரவேற்பை பார்க்கையில் இது பரப்புரை அல்ல, திமுகவின் வெற்றி விழா என்பது தெளிவாக தெரிகிறது.

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி. ஆண்டி அம்பலம் மிக எளிமையானவர். ஆண்டி அம்பலத்தை எதிர்த்து போட்டியிடும் நத்தம் விஸ்வநாதன் மின்சாரத் துறையில் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். 279 கோடி ரூபாய் விஸ்வநாதன் வரி கட்டவேண்டிய உள்ளது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக அமைச்சர்கள் மட்டுமே மட்டுமே வெற்றிநடை போடுகிறார்கள். எல்லாம் விரைவில் விசாரிக்கப்படும். நத்தத்தில் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் கல்லூரி நடத்துவதால், இங்கு அரசு கல்லூரி அமைக்கவிடாமல் பார்த்து கொள்கிறார்.

வாக்கு எண்ணிகை முடிந்தவுடன் ஸ்டாலின் முதலமைச்சராக வந்துவிடுவார். நத்தத்திற்க்கு தேவையான திட்டங்கள் வந்து சேரும். 10 ஆண்டுகள் ஆட்சி நடந்துவருகிறது. இந்த ஆட்சியில் ஒருவருக்காவது வேலை கிடைத்துள்ளதா?

23 லட்சம் பேர் வேலையில்லாமல் படித்துவிட்டு தவித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் ஜவுளி பூங்கா கொண்டு வரவில்லை. இந்த ஆட்சியில் எதை சொன்னாலும் நிறைவேற்றமாட்டார்கள். மக்களுக்கு எதையும் செய்யாத ஆட்சி இந்த ஆட்சி. வேளாண் சட்டத்தை ஆதரித்தவர் விவசாயி பழனிசாமி.

பதவி வெறிக்காக தமிழ்நாட்டை டெல்லியில் அடமானம் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர் பட்டியலை இந்தியில் வெளியிட்டார்கள். இந்தியை திணிக்க முயற்சி மேற்கொள்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் பாஜக செயல்பட்டு வருகிறது.

இதை அதிமுக வேடிக்கை பார்க்கிறது‌. தமிழனே தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். பாஜகவிற்கு எதிராக குரல் கொடுப்பவர் ஸ்டாலின் மட்டும் தான். திமுக ஆட்சி வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் அந்தப் பெண்களுக்கு அந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு தனியாக நீதிமன்றம் உருவாக்கப்படும்.

பிரதமர் மோடியும் எதை சொன்னாலும் செய்ய மாட்டார், அதைப் போலவே முதலமைச்சர் பழனிச்சாமியும் எதை சொன்னாலும் செய்யமாட்டார். இருவரும் கூட்டணி அமைத்து உள்ளார்கள். இந்தக் கூட்டணி தேர்தலுக்கு பிறகு உடையும். ஸ்டாலின் ஆட்சியில் நத்தத்தில் அரசு கல்லூரி தொடங்கப்படும்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நத்தம் பகுதிக்கு விரிவுப்படுத்தப்படும். சாணார்பட்டி மில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி திறக்கப்படும். ரேஷன் கடை உண்மையான நியாய விலைக்கடையாக நடத்தப்படும். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 லட்சம் வேலைகள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்’ என்றார்.

கனிமொழி எம்.பி

இந்தப் பரப்புரையின் போது 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக வேட்பாளர் காரிலிருந்து ரூ.94 ஆயிரம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details