திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியைச் சேர்ந்த வடகவுஞ்சி கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்டது பட்டிக்காடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு வடகவுஞ்சி கிராமத்தின் அதிமுக பஞ்சாயத்து உறுப்பினர் சொக்கர் பாலாஜி பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சொக்கர் பாலாஜி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தேடப்பட்டு வருகிறார். ஆனால்வழக்குப்பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அவர் கரோனா தொற்றுக்கு ஆளாகி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் காவல் துறையினர் அவரைக் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, கரோனா சிகிச்சை முடிந்தவுடன் அவர் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.05) ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்த சொக்கர் பாலாஜியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:பாலியல் வன்கொடுமை கொலைகள் தொடர்பாக மநீம தீர்மானம்!