தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி - திண்டுக்கல் சீனிவாசன் - dindigul srinivasan

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 130 முதல் 150 தொகுதிகளில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். ஹாட்ரிக் வெற்றியுடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய உள்ளது என்றார்.

dindigul srinivasan
dindigul srinivasan

By

Published : Apr 6, 2021, 1:15 PM IST

திண்டுக்கல்: எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் வாக்கு செலுத்திய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மக்கள் ஆதரவோடு ஹாட்ரிக் வெற்றி பெறுவோம் என்றார்.

தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சட்டப்பேடவைத் தொகுதியில் இரண்டாம் முறையாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 130 முதல் 150 தொகுதிகளில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். ஹாட்ரிக் வெற்றியுடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய உள்ளது என்றார்.

அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி - திண்டுக்கல் சீனிவாசன்
இதே போல் திண்டுக்கல் mvm கல்லூரியில் வாக்கு செலுத்திய வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மிக எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. எடப்பாடி தலைமையில் மீண்டும் வெற்றி நடைபோடும் தமிழகம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details