தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓபிஎஸ் மகன் ஓபிஆர் எம்.பி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி; காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு!
இச்சம்பவத்தின் விளைவாக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வடமதுரை சாலையில் அதிமுகவினர், ரவீந்திரநாத் வாகனத்தை கறுப்புக் கொடி ஏந்தி முற்றுகையிட்ட போராட்டகாரர்களை கைது செய்யக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் ஒட்டன்சத்திரம் வடமதுரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.