தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளூரிலேயே விலைபோகாத மாடு...! ராகுலை சாடிய திண்டுக்கல் சீனிவாசன் - 2019 நாடாளுமன்றத் தேர்தல்

திண்டுக்கல்: செம்பட்டியில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து, தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, உள்ளூரிலேயே விலைபோகாத மாடு வெளியூரில் எப்படி விலைபோகும் என ராகுல் காந்தியை விமர்சித்தார்.

PMK

By

Published : Apr 2, 2019, 10:24 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுவருகின்றனர்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இந்நிலையில், திண்டுக்கல் அருகே செம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், 'காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தென்நாட்டில் கேரள மாநிலத்தில் போட்டியிடுவதன் அவசியம் என்ன? ராகுலுக்கு வட மாநிலத்தில் மரியாதை இல்லை. உள்ளூரிலேயே விலைபோகாத மாடு வெளியூரில் எப்படி விலைபோகும்.

காங்கிரஸ்-திமுகவும் ஒன்றாக ஆட்சியில் இருந்தபோதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம்ஊழல் நடைபெற்றது. சிதம்பரமும், அவரது மகனும் முன்பிணைபெற்று வழக்குகளை சந்திக்க முடியாமல் உள்ளனர்' என அவர் தெரிவித்தார்.

இதில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பாமக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எழுந்துசென்றதால், அதிகமான சேர்கள் காலியாகவே காட்சியளித்தன. இதனால் மக்களின் பங்கேற்பின்றி பாமக பொதுக் கூட்டம் வெறிச்சோடி நடைபெற்றது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது அதிமுக தொண்டர்களின் அதிருப்தியே காரணம் என கூறப்படுகிறது. அதிமுக தொண்டர்களின் புறக்கணிப்பு பாமக வேட்பாளரை கலக்கமடையச் செய்துள்ளதாக தெரிகிறது.

திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு
திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details