தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் மகன் கருணாநிதி... உளறும் திண்டுக்கல் சீனிவாசன்! - admk

திண்டுக்கல்: தேர்தல் பரப்புரையின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஸ்டாலின் மகன் கருணாநிதி என்று உளறியதால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திண்டுக்கல் சீனிவாசன்!

By

Published : Apr 1, 2019, 3:00 PM IST

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வேட்பாளர் ஜோதி முத்து போட்டியிடுகிறார். அவருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமந்த நகர், மாலைப்பட்டி, தோட்டனூத்து உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது மாம்பழச் சின்னத்திற்கு பதிலாக, ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

இதனால் அங்கு கூடியிருந்த அதிமுக, பாஜக, பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டும் இல்லாமல், ஸ்டாலின் மகன் கருணாநிதி என்று குறிப்பிட்டார். மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இதே போல் அவர் ஆப்பிள்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details