திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முகக் கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இதனிடையே, 'அருவி' பட நடிகை அதிதி பாலன் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் வந்துள்ளார். அப்போது முகக் கவசம் இன்றி வாகனத்தில் வந்த அதிதி பாலனிடம் அபராதம் விதிக்க விவரங்கள் கேட்டபோது அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.