திண்டுக்கல்:திண்டுக்கல் ஆர்த்தி திரையரங்கில் சித்தா திரைப்படம் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று(அக்.08) சித்தா படம் ஓடும் திரையரங்கிற்கு, தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சென்று ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, நடிகர் சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும், சித்தா திரைப்படம் திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட சித்தா படம், குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
ஒரு நடிகனாக சித்தா படம், என் முதல் படமாக கருதுகிறேன். சினிமாவில் 20 வருடமாக நடித்த சித்தார்த் வேறு, சித்தா படத்தின் சித்தார்த் வேறு. இந்தப் படத்தில் புதுமுக நடிகனைப் போல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் நடித்த எந்த படத்தின் சாயலும் இல்லாமல் புது நடிகனாக, ரொம்ப மரியாதை கொடுத்த படம் சித்தா படம்.