தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளி அருவி அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து - பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது

திண்டுக்கல்: கொடைக்கானல் வெள்ளி அருவி அருகே கேரள சுற்றுலா வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர்.

accident near silverfalls
accident near silverfalls

By

Published : Jan 16, 2020, 9:35 AM IST

பொங்கல் சுற்றுலா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு பொங்கல் விடுமுறையை கழிக்க சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

வெள்ளி அருவியருகே விபத்து

அப்போது வெள்ளி அருவி அருகே வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. வாகனம் பள்ளத்தில் விழுந்ததைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் விரைந்துசெயல்பட்டு வாகனத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வெள்ளி அருவி அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து

உயிர்பிழைத்த பயணிகள்

இதனால் லேசான காயங்களுடன் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வாகனம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதியும் படிங்க:’நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு தீர்க்கப்பட்டால் அதை ஊக்குவிக்க வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details