மதுரை திருப்பரங்குன்றம் புதிய நீதிக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தபோது மாவட்ட விளையாட்டு அரங்கு அருகே அதிமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வேலூரில் தேர்தல் நின்றதற்கு காரணம் துரைமுருகன் - ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு - AC SHANMUGAM
திண்டுக்கல்: வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நின்றதற்கு துரைமுருகன்தான் காரணம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
அப்போது ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேலூரில் எனக்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நாள் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்தனர். அதனால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சூலூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் துரைமுருகன் சூளுரையாற்றினார். ஆனால் ஆட்சியும் மாறாது, காட்சியும் மாறாது, அவருடைய கனவு தான் மாறும். நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருந்தால் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். இது தெரியாமல் துரைமுருகன் கற்பனையில் பேசிக்கொண்டிருக்கிறார். வேலூர் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு துரைமுருகன் தான் காரணம்.
அவருடைய வீட்டில் தான் கட்டுக்கட்டாக ரூபாய் 13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாகத்தான் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை தள்ளி வைத்தது"என்றார்.