தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2021, 10:47 PM IST

ETV Bharat / state

கதவைத் திறக்காத மனைவி: தற்கொலை செய்து கொண்ட கணவன்

நீண்ட நேரம் அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்த கணவர், சிறிது நேரத்திற்குப் பின் எவ்வித சத்தம் இன்றி இருந்ததால், அவர் தூங்கிவிட்டதாக நினைத்து நாகஜோதி தனது அறையில் உறங்கினார். பின்பு காலையில் எழுந்து அறையின் கதவை திறந்தபோது கதவு திறக்க முடியாமல் போனதால், அருகிலிருந்த உறவினர்களுக்கு நாகஜோதி தகவல் கொடுத்தார்.

A Police suicide due to family issue
A Police suicide due to family issue

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே நீண்ட நேரம் கதவை தட்டியும் மனைவி கதவை திறக்காததால் இறந்துவிட்டதாக கருதி தானும் தூக்கிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரில் வசித்து வருபவர் ரத்தினகிரி. இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும். இரண்டு மகள்களும் உள்ளனர். நாகஜோதி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன். மனைவி தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதிகாலை 3 மணி அளவில் தன் மனைவி நாகஜோதி தூங்கிக்கொண்டிருந்த அறையை ரத்தினகிரி பலமாக தட்டியுள்ளார். நாகஜோதியின் அரை நீண்ட நேரமாக திறக்கப்படாததால், நாகஜோதி தற்கொலை செய்து கொண்டதாக கருதி மனமுடைந்த காவலர் ரத்தினகிரி, செய்வதறியாது திகைத்து நின்று தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரம் அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்த கணவர், சிறிது நேரத்திற்குப் பின் எவ்வித சத்தம் இன்றி இருந்ததால், அவர் தூங்கிவிட்டதாக நினைத்து நாகஜோதி தனது அறையில் உறங்கினார். பின்பு காலையில் எழுந்து அறையின் கதவை திறந்தபோது கதவு திறக்க முடியாமல் போனதால், அருகிலிருந்த உறவினர்களுக்கு நாகஜோதி தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள், கதவை உடைத்து நாகஜோதியை மீட்டனர். பின்பு ரத்தனகிரி உறங்கிக்கொண்டிருந்த கதவை உடைத்து பார்த்தபோது ரத்தனகிரி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பிறகு வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ரத்தனகிரி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details