திண்டுக்கல்: கொடைக்கானலில் செல்போன் மூலம் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பணம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், "கொடைக்கானலில் பிரபல ஹோட்டல்கள், முக்கிய பிரமுகர்கள் அதாவது எளிதாக கிடைக்கூடிய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளும் ராஜ் என்னும் நபர் தான் மருத்துவர் என்றும் எனது போனில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நண்பருக்கு பணம் அனுப்ப முடியவில்லை. ஆகவே நீங்கள் கூகுள் பே மூலமாக பணம் கொடுங்கள்" என்று கேட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
கொடைக்கானலில் அரசு மருத்துவர் என்று கூறி கூகிள் பே மூலம் பணம் கேட்கும் நபர் - பணம் பறிப்பு
கொடைக்கானலில் அரசு மருத்துவர் என்று கூறிக்கொண்டு முக்கிய பிரமுகர்களிடம் கூகுள் பே மூலமாக பணம் கேட்டுவரும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு மருத்துவர் என கூறி மொபைல் போன் மூலம் பணம் பறிக்கும் நபர்
இதுகுறித்து போலீசார் கொடைக்கானல் மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்ரதியிடம் ராஜ் என்ற பெயரில் மருத்துவர் இருக்கிறாரா என்று கேட்டுள்ளனர். அப்படி யாருமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார்!!