திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார், திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் சித்ரா கார் பார்க்கிங் செண்டர் நடத்தி வந்தார். இவர் நேற்று (மே.8) இரவு இருசக்கர வாகனத்தில் பழனி சாலையில் உள்ள ராமன் கோ பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் ராம்குமாரை அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை: காவல் துறையினர் விசாரணை!
திண்டுக்கல்: பழனி சாலையில் உள்ள ராமன் கோ பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை முன்பகை காரணமாக நடந்ததா, தொழில் போட்டி காரணமாக நடந்ததா என்னும் கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலைத் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு; 4,092 பேர் உயிரிழப்பு!