திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை சீசனுக்காக பிரையண்ட் பூங்காவில் பல வகையான வண்ண மலர்கள் நடுவது வழக்கம்.
அதன்படியே வருகின்ற கோடை சீசனுக்காக மேரி கோல்ட், ஆஸ்ட்ரஸ், அஸ்டமேரியா போன்ற விதைகள் கொண்டுவரப்பட்டு, அதனை நடவு செய்யும் பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது.
தற்போது நடவு பணி முடிந்த நிலையில் கொடைக்கானலில் மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பனியிலிருந்து அம்மலர்களை பாதுகாப்பதற்காக பச்சைக் கம்பளம் விரித்து பாதுகாத்து வருகின்றனர்.