தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2022, 7:39 PM IST

ETV Bharat / state

வீட்டில் பசு மாட்டை கொன்று புதைத்து பூஜை செய்த காங்கிரஸ் பிரமுகர்? - வீட்டு உரிமையாளர் புகார்

திண்டுக்கல்லில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தனது வீட்டை அபகரிக்கும் நோக்கில், பசு மாட்டை கொன்று வீட்டில் புதைத்து பூஜை செய்து வருவதாக, வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

dgl-
dgl-

திண்டுக்கல்: நேருஜி நகரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவருக்கு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை கடந்த 2018ஆம் ஆண்டு, திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ள துரை மணிகண்டன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்த வீட்டை தனது கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வரும் துரை மணிகண்டன், சில மாதங்கள் மட்டுமே முறையாக வாடகை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக முறையாக வாடகை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், துரை மணிகண்டன் பசு மாட்டை கொன்று வீட்டின் வளாகத்திற்குள் புதைத்து வைத்துள்ளதாகவும், மாந்திரிகம் செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். தனது வீட்டை துரை மணிகண்டனிடமிருந்து மீட்டுத்தருமாறு புகாரில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து துரை மணிகண்டனிடம் கேட்டபோது, "நான் ஜல்லிக்கட்டு காளை ஒன்றினை வளர்த்து வந்தேன். கரோனா காலகட்டத்தில் அந்த காளை இறந்துவிட்டது. அந்தக் காளையை வெளியே புதைக்க மனம் இன்றி வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளேன். நான் பசு மாட்டை கொன்று புதைத்துள்ளேன் என என் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டரீதியாக இதை சந்திப்பேன்" என்று கூறினார்.

இதே துரை மணிகண்டன் கடந்த மாதம் அனுமதியின்றி காவல் ஆய்வாளர் உடையில் நகரை வலம் வந்து, காவல் துறையினரிடம் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓடும் ரயிலில் குற்றங்கள் - பயணிகளை அலைக்கழிக்கக் கூடாது என அறிவுரை..!

ABOUT THE AUTHOR

...view details