தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 14, 2022, 7:17 AM IST

ETV Bharat / state

திண்டுக்கல் அருகே பைபாஸ் சாலையில் ஓடும் காரில் தீ விபத்து

திண்டுக்கல் அருகே பைபாஸ் சாலையில் ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்டது.

காரில் தீ விபத்து
காரில் தீ விபத்து

திண்டுக்கல் :புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்தவர் பகுருதீன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள கடையில் தனது காரின் கண்ணாடிகளை மாற்றுவதற்காக விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது காரை எடுப்பதற்காக புதுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் வந்த பக்ருதீன் கண்ணாடிகளை மாற்றிவிட்டு மீண்டும் ஊருக்கு தனது காரில் சென்றுள்ளார். ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எம்விஎம் கல்லூரி மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது புகை வருவதாக அருகில் சென்ற நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த பக்ருதின் காரில் இருந்து இறங்கி வருவதற்குள் காரில் மளமளவென தீ பரவியது.

காரில் தீ விபத்து

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details