தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்! - 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

python
python

By

Published : Nov 29, 2019, 11:27 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விவசாயி சிவமுருகன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டம் ஒன்று உள்ளது. சிவமுருகன் தோப்பை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வாழைத்தோப்பு வரப்பின் கரையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 8 அடி நீள மலைப் பாம்பை லாவகமாகப் பிடித்து அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

பின்பு அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இதையும் படிங்க: நுரைப் பஞ்சுகளாய் காட்சியளிக்கும் பட்டினப்பாக்கம் கடற்கரை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details