திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ளது ஜி.நடுப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 2 தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்தவர் உளியப்பகவுடர். இவருக்கு 5 திருணமங்கள் நடந்தன. 4 மனைவிகளுக்கு 9 மகன்கள் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி ஒரு கிராமத்தையே உருவாக்கினர்.
இவர்கள் வசித்த பகுதி நாட்டாமைக்காரத்தெரு என்று அழைக்கப்பட்டது. 4 மகன்களும் பொருளாதார தேவைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். அனைவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்தபோதும் குலதெய்வ வழிபாட்டுக்காக ஒன்று சேர்வது வழக்கம்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளிநாட்டில் இருந்தவர்கள் வர முடியவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குலதெய்வக் கோயிலில் ஒன்றுகூட முடிவு செய்தனர்.