தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

90 அடி கிணற்றில் தவறி விழுந்த 6 மயில் குஞ்சுகள் மீட்பு - Dindigul district news

திண்டுக்கல் : வாலிசெட்டி பகுதியில் 90 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆறு மயில் குஞ்சுகளை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர்‌ மீட்டனர்.

6 peacock cubs that fell into the well
6 peacock cubs that fell into the well

By

Published : Oct 28, 2020, 7:34 AM IST

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிப்பட்டி செல்வராஜூக்குச் சொந்தமான தோட்டத்தில் 90 அடி கிணற்றில் ஆறு மயில் குஞ்சுகள் தவறி விழுந்ததன. அப்போது அந்தப் பகுதிக்கு வந்த ஒருவர் கிணற்றுக்குள் மயில் குஞ்சுகள் சத்தம் கேட்பதைப் பார்த்து வேடசந்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு ஆறு மயில் குஞ்சுகளையும் உயிருடன் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தீயணைப்புத் துறையினரின் செயலை பார்த்த அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details