திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்படை காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
500 கிலோ புகையிலை பறிமுதல்; ஒருவர் கைது...!
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களைக் கடத்தி வந்தவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது வி.புதுக்கோட்டை கிராமத்தில் சரக்கு வாகனம் ஒன்றில் குட்கா இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து புளியமரத்துக்கோட்டை பகுதியில் வேடசந்தூர் ஆய்வாளர் கவிதா வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து வாகனத்தில் வந்த நூர் முகமது(35) என்பவரிடமிருந்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து அவரிடம் வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பட்டியலின பெண்ணுக்கு ரோலிங் சேரா? - ஊராட்சித் தலைவருக்கு அச்சுறுத்தல்