தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற  4 சிறுவர்கள் கைது! - 4 children arrested at posco act

திண்டுக்கல்: செல்போனில் விளையாட சொல்லி தருவதாகக் கூறி எட்டு வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற நான்கு சிறுவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆ
ஆக

By

Published : Aug 1, 2020, 4:14 AM IST

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே கக்கன் நகரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர், வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் செல்போனில் விளையாட சொல்லி தருவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்பு நான்கு சிறுவர்களும் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நான்கு சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர், கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்பதால் சிறார் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details