திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள ஆர்எம்டிசி காலனியை அடுத்த ராதாராஜ் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார் (35). இவர் கடந்த மாதம் 19ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இது குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக ரெங்கசமுத்திரப்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவர் நவம்பர் 23ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மனைவி பிரிந்து சென்றதற்காக கொலை: ஒருவர் சரண், 4 பேர் கைது! - Tamilnadu News
திண்டுக்கல்: நத்தம் சாலை அருகே கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்த கொலை வழக்கில் ஒருவர் சரண் அடைந்த நிலையில், 4பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவரை தாலுகா காவல் துறையினர் கடந்த டிச. 01ஆம் தேதி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மனைவி பிரிந்து சென்றதற்கு சரவணகுமார் காரணமாக இருந்ததால் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள காமாட்சிபுரம் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர், அங்கு பதுங்கியிருந்த செந்தூரியன், அய்யப்பன், எடிசன் அன்வர், அந்தோணி கஸ்பார் ஆகிய 4 பேரையும் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல்செய்த காவல் துறையினர், நால்வரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இட்லி மாவு பாக்கெட்டில் நத்தை