திண்டுக்கல்: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக கொலைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித கொலை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடர் கொலைகள் அரங்கேறியுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் நான்கு கொலைகள் நடந்துள்ளன. நேற்று(ஜூலை 9) இரவு மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ரவுடி கொல்லப்பட்டார். இன்று(ஜூலை 10) பஞ்சம்பட்டியில் அருள்நாதன்(60) என்ற முதியவரை சந்துரு(28) என்ற இளைஞர் கட்டையால் அடித்து கொலை செய்தார்.