தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்.. ஒரு மணிநேரத்தில் மீட்ட நத்தம் போலீசார்.. - Dindigul Natham Police

திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய நபர்களை ஒரு மணி நேரத்தில் நத்தம் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 21, 2022, 6:24 AM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு வருகிறார். இவர் கமுதியைச் சேர்ந்த எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு 96 ஏக்கர் நிலத்தை 1 கோடியே 5 லட்ச ரூபாய்க்கு பேசி முடித்ததாகக் கூறப்படுகிறது. அதில், முதல் தவணையாக 56 ஏக்கருக்கு மட்டும் பத்திர பதிவு செய்துள்ளனர். மீதியுள்ள இடத்திற்கு பத்திரப்பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அழகப்பன் அலைக்கழிப்பு செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நிறுவனத்தினர் கண்ணன், முத்தையா, வீரப்பன், மருது ஆகிய நால்வரும் சேர்ந்து அழகப்பனை நத்தத்தில் இருந்து திண்டுக்கலுக்கு காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து அழகப்பன் உறவினர் ராஜா என்பவர், நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

கடத்தப்பட்டவர் மீட்பு

இதன் பெயரில் நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணையை, துரிதப்படுத்தி காரை சாணார்பட்டி காவல் நிலையம் அருகே தலைமை காவலர்கள் கிருபாகரன், கணேசன் ஆகியோர் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அழகப்பனை மீட்டதோடு, அவரைக் கடத்திய 4 நபர்களை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பயங்கரவாத செயல்களுக்கு PFI ஆள் திரட்டியதாக குற்றச்சாட்டு - NIA அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details