தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குக்கிராமங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்' - திண்டுக்கல் ஆட்சியர்

திண்டுக்கல்: ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், 3 ஆயிரத்து 83 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Jul 17, 2020, 7:02 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்பகுதியில் உள்ள அனைத்து தனிநபர் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஊரக குடிநீர் இயக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட ஆண்டு செயல் திட்டத்தின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-2024 ஆம் ஆண்டுக்குள் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 கிராம ஊராட்சிகளில் உள்ள 3 ஆயிரத்து 83 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் உள்ள முறையற்ற அனுமதி பெறாத வீட்டு குடிநீர் இணைப்புகளை உரிய வைப்புத் தொகை செலுத்தி, பெற்று முறைப்படுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஊராட்சிகளில் உள்ள அனுமதி பெறாத வீட்டு குடிநீர் இணைப்புகளை கொண்டுள்ள பொதுமக்கள் , சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை அணுகி தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பிற்குச் செலுத்தப்பட வேண்டிய 3 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையினை செலுத்தி, குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் முறைப்படுத்திக் கொள்ள தவறும்பட்சத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details