திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு திருப்பூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா சென்று திரும்பும்போது பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள சவரிக்காடு அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேரும் காயம் அடைந்தனர்.