திண்டுக்கல் ஜிடிஎன் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் தீபக் குமார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக யோகாசன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் 1500 ஆணிகள் கொண்ட ஆணிப் படுக்கையில் நேற்று காலை 10:30 மணி முதல் இன்று காலை 10:30 மணி வரைத் தொடர்ந்து 24 மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது முயற்சியை பாராட்டி கல்லூரி சார்பில் சான்றிதழ், விருது வழங்கப்பட்டது.
ஆணிப் படுக்கையில் தொடர்ந்து 24 மணி நேரம் அமர்ந்து தீபக்குமார் என்ற மாணவர் சாதனை முன்னதாக நேற்று இவர், 1500 ஆணிகள் கொண்ட ஆணிப் படுக்கையில் 32 நிமிடங்கள் 40 வினாடிகளில் 100 யோகாசனங்களை செய்தும் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.