தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 22 ஆடுகள்: மருத்துவர் சோதனை - ஆடுகள் உயிரிழப்பு

திண்டுக்கல்: பித்தளைப்பட்டி அருகே சந்தேகத்திற்கு இடமாக உயிரிழந்த 22 ஆடுகளை கால்நடை மருத்துவர் சோதனை செய்துவருகிறார்.

சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த 22 ஆடுகள்: மருத்துவர் சோதனை!
சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த 22 ஆடுகள்: மருத்துவர் சோதனை!

By

Published : Jun 4, 2021, 1:09 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவர் ஆடுகளை வைத்து தோட்டங்களில் கிடை அமைத்து வாழ்ந்துவந்தார். தற்போது ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பித்தளைபட்டியில் குடியிருந்துவருகிறார்.

இவர் தாமரைக்குளம் அடிவாரத்திலுள்ள தோட்டத்தில் மூன்று பட்டிகள் அமைத்து அதில் 4 மாத ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைத்துவிட்டு, பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது இரண்டு பட்டிகளில் அடைத்துவைத்திருந்த 22 ஆடுகள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆடுகளின் உரிமையாளர், குஞ்சனம்பட்டி கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளைப் பார்வையிட்டு, நாளை மருத்துவப் பரிசோதனைக்குப் பின்தான் ஆடுகள் இறப்புக்கான காரணத்தை கூற முடியும் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details