தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட மன்னார் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்ற 19 பேருக்கு அபராதம்! - Travel to restricted islands in violation of regulations

தூத்துக்குடி: விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட தீவுகளுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் மீனவர்கள் உள்பட 19 பேரை வனத்துறையினர் கைது சென்றனர்.

fined for going to restricted area

By

Published : Nov 18, 2019, 4:27 AM IST

தூத்துக்குடி மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரக காவல் துறையினர் நேற்று தூத்துக்குடி கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது வான்தீவு பகுதியில் அலுவலர்கள் ரோந்து சென்றபோது, அனுமதியின்றி இரண்டு படகுகள் அப்பகுதியில் நிற்பதை அறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த படகுகளை சுற்றி வளைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான 2 படகுகளில் விதிமுறைகளை மீறி பாதுகாக்கப்பட்ட உயிர்கோள பகுதிக்கு கல்லூரி மாணவர்களை, மீனவர்கள் சுற்றுலா அழைத்து வந்தது தெரியவந்தது.

படகில் வந்தவர்களை பிடித்து காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சுற்றுலா சென்றவர்கள் நெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்ற 19 பேருக்கு அபராதம்

இதைத்தொடர்ந்து பிடிப்பட்ட 19பேருக்கும் அபராதம் விதித்த காவல் துறையினர் கல்லூரி மாணவர்களையும் மீனவர்களையும் எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து, வனச்சரக அதிகாரி ரகுவரனிடம் கேட்டபோது அபராத தொகையாக தலா ரூ.2ஆயிரம் வீதம் ரூ. 38 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:குடிநீர் சேமிப்பும் மத்திய அரசின் நடவடிக்கைகளும்!

ABOUT THE AUTHOR

...view details